csk, ops, martin, mk stalin PT
தமிழ்நாடு

CSK to ADMK - ரூ.5 கோடி; மார்ட்டின் to DMK - ரூ.509 கோடி; தேர்தல் ஆணையல் வெளியிட்டுள்ள புதிய தகவல்

திமுக பெற்ற மொத்த தொகையில் லாட்டரி கின் மார்ட்டின் நிறுவனம் மட்டும் ரூ.509 கோடி ரூபாய் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

PT WEB

நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகள் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 14ஆம் தேதி, தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதன்படி ஏர்டெல்லை நடத்தும் பார்தி குழுமம், முத்தூட் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்ஆர்எஃப், சியட், வேதாந்தா, ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப் என பல பிரபல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்தது.

உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ

இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் மதிப்புக்கு பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்தது. இதில், 2019, ஏப்ரல் 12 முதல் 2024, ஜனவரி 24 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய முதல் 30 நிறுவனங்களில் குறைந்தது 14 நிறுவனங்கள் மத்திய அல்லது மாநில விசாரணை அமைப்புகளால் நடவடிக்கையை எதிர்கொண்டதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

அதேசமயத்தில் எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்கள் விவரங்களில், தேர்தல் பத்திரங்களின் எண்களை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், திங்கட்கிழமைக்கும் விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 14 ஆம் தேதி வரையிலான விபரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் வெளியிடப்படாமல் இருந்த விபரங்களையும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ரூ.509 கோடி ரூபாயை லாட்டரி மன்னன் சந்தியாகு மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. திமுக மொத்தமாக பெற்ற தொகையே ரூ.656.5 கோடி ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தியாகு மார்ட்டின் மொத்தமாக வழங்கிய ரூ.1368 கோடி ரூபாயில் திமுக 37% பணத்தை பெற்றுள்ளது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தெரியவந்துள்ளது.

அதேபோல் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அதிமுகவிற்கு ரூ.4 கோடி நிதி அளித்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. அதிமுகவிற்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட தொகை மொத்தம் ரூ.6 கோடி ரூபாய். அதில், சென்னை அணி மட்டும் 4 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. நிதிப்பத்திரங்கள் மூலம் பெற்ற தொகை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், அதிமுகவின் அப்போதைய ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

DOC-20240317-WA0015_240317_151327.pdf
Preview