பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, பிற மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கலாம் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: "அனைத்து சேதங்களும் விரைந்து சரிசெய்யப்படும்" - செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின்