தமிழ்நாடு

செவிலியர் பணி நிரந்தர அவமதிப்பு வழக்கு - சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

செவிலியர் பணி நிரந்தர அவமதிப்பு வழக்கு - சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

webteam

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதார துறை செயலாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரப்படுத்த கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கடந்த 2017ம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்நிலையில் மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதால் செவிலியர் போரட்டத்திற்கு தடை விதிக்க கோரி கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் செவிலியர்களுடன்  சுகாதார துறை செயலாளர் குழு அமைத்து 6 மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சுகாதார துறை செயலாளர் தலைமையிலான குழுவிடம், தனித்தனியாக தாங்கள் கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்தாக கூறி செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை.விசாரித்த நீதிபதிகள் கே.கே சசிதரன், பி.டீ ஆஷா அமர்வு, சுகாதார துறை செயலாளர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.