தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, நேற்று பிப்ரவரி 22-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘தேர்தலில் பாஜகவை தமிழக மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்- ராகுல்' இது நிஜமானதா தகர்க்கப்பட்டதா எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே...
2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் வாங்கிய இடங்கள் முட்டை மட்டுமே...Seat share % பார்த்தால் 0 என்றே வரும்.. ஆனால் இதுவா அந்த கட்சிகளின் பலம்? இதுவா அந்த கட்சிகளின் வாக்கு சதவிகிதம்?
ஒரு ஓட்டுதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்..பலத்தை நிர்ணயிப்பது கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.
நிஜமானது... ஒரு நகராட்சியை கூட பாஜகவால் பிடிக்கமுடியவில்லை.. அது திராவிட கட்சிகளை சார்ந்தே இருக்கிறது, இனியும் இருக்கும்.. !!
நிச்சயமாக தகர்க்கப்பட்டது !!
காந்தியை கொன்ற கோட்சே நல்லவர் என்று தேர்தலுக்கு முன்பே பேசிய #பாஜக வேட்பாளர் இன்று வென்றுள்ளார்.
இதுவே ஒரு மிக பெரிய உதாரணம் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
களத்தில் பாஜக உழைக்கிறது !! காங்கிரஸ் வேடிக்கை பார்க்கிறது.
அதிமுக அடிமையாக இருக்கும் வரை பாஜக வளரும்..
அதிமுக eps - ops இல்லாத நல்லதொரு தலைமை கிடைத்தால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்..
பாஜகவின் மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
பாஜகவின் அரசியல் தமிழக மக்களால் நிர்ணயம் செய்யப்படும்.
மக்கள் விரும்பும் அரசியலை செய்தால் மட்டுமே பாஜக இங்கு வளர முடியும்..
இங்கு பல கட்சிகள் அதிமுக - திமுகவிற்கு மாற்று என்று வந்தார்கள், வென்றார்கள் ஆனால் காணாமல் போகிறார்கள்.. காரணம் மக்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் ஆனால் உங்களால் மக்களுக்கு திட்டங்கள் இல்லை எனில் உடனே நிராகரிக்க படுவீர்கள்..
இந்த தேர்தலில் உங்களுக்கு வாய்ப்புதான் வழங்கப்பட்டு உள்ளது.. நீங்கள் அடுத்த தேர்தலில் துரத்தி அடிக்கப்படலாம். அது நீங்கள் செய்யும் அரசியலை பொறுத்தது..
கவனிக்கவும்...
திமுக, காங்கிரஸ் ஏன் அதிமுக கூட இன்னும் நிராகரிக்கப்படவில்லை..
பாஜக நாற்காலி போட்டு அமர்ந்து விட்டது. காங்கிரஸ் இன்னும் திமுகவின் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கிறது. ராகுல் கவலைப்பட வேண்டியது காங்கிரஸைப்பற்றி.
இது நிஜமானது தான். ராகுல்காந்தியின் அனுபவ மொழி காங்கிரஸ் செய்த அதே தவறை இவர்களும் அடி பிசகாமல் மற்றும் கூடுதலாக மதவாதமும் செய்கிறார்கள். தமிழர்கள் நிச்சயம் ஆதரிக்க மாட்டார்கள், தமிழர் விரோத மனப்பான்மையுடன் இருக்கும் வரை தேசிய கட்சிகள் தமிழர்களை ஆட்சி செய்ய முடியாது.
தமிழகம் பாஜகவை எப்படி நிராகரித்து இருக்கிறது?
சென்னையின் 200 வார்டில் 199 வார்டில் பாஜக நிராகரிக்கப்பட்டு இருக்கிறது!
தமிழகத்தின் 138 முனிசிபாலிடிகளில் 138 முனிசிபாலிடிகளிலும் பாஜக நிராகரிக்கப்பட்டு இருக்கிறது!
தமிழ்நாட்டின் 490 டவுன் பஞ்சாயத்தில் 489 டவுன் பஞ்சாயத்து பாஜகவை நிராகரித்து இருக்கிறது!
தமிழ்நாட்டின் 21 இடத்திலும் மேயராக முற்றிலும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது!
பொய்க்கும் புரட்டுக்கும் மதவாதத்துக்கும் சாதி வேற்றுமைக்கும் தமிழகத்தில் இடம் இல்லை
மணிகண்டன்
பாஜக வெற்றி பெற்ற 300+ வார்டுகளில் கன்னியாகுமரியில் மட்டுமே 206 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாவட்டத்தில் மட்டும் பெருவாரியான வெற்றியை பெற்று விட்டு நங்கள் தான் மூன்றாவது அணி என சொல்வது முட்டாள்தனம். ஆறு கோடி வாக்காளர்களை கொண்ட தமிழ்நாட்டில் ஒன்பது லட்சம் வாக்குகளை பெற்ற ஒரு தேசிய கட்சியில் ஒரு அறிவாளி கூட இல்லை போல. பதிவான வாக்குகளை கொண்டு பார்த்தால் கூட 3% வாக்குகள் தான் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 2.25 தற்போது 3 சதவிகிதம் அப்படி என்றால் பதினோரு ஆண்டுகளில் பாஜகவின் வளர்ச்சி வெறும் 0.75 சதவீதம் தான் 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியின் தோல்வி தமிழ்நாட்டில் 2026 ஆம் வருடம் பாஜகவின் வளர்ச்சியை மேலும் பாதிக்கும் ஒரு பொழுதும் தமிழ்நாட்டில் பாஜக பெரும் வெற்றியை பெற முடியாது