தமிழ்நாடு

யானைகளுக்கு தனித் தண்ணீர் தொட்டி அமைத்த வனத்துறை!

யானைகளுக்கு தனித் தண்ணீர் தொட்டி அமைத்த வனத்துறை!

webteam

தருமபுரியில் யானைகள் நீர் அருந்துவதற்காக சிறப்பு தண்ணீர்த்தொட்டியை வனத்துறை அமைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் பெரும்பாலான உயிரினங்கள் குடிப்பதற்கு நீரின்றி உயிரிழப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும் 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியில் வனவிலங்குகள் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் மற்றும் உணவுகள் தேடி ஊருக்குள் வந்த சம்பவங்கள் அதிகரித்தன. குறிப்பாக யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதற்கு காரணம் வனப்பகுதியில் அவைகளுக்கு குடிநீர் கிடைக்காகதே என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் யானைகள் குடிநீர் மற்றும் உணவுகளுக்காக ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தொடர் கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தருமபுரியில் யானைகளுக்கென, வனப்பகுதிக்குள் தனித் தண்ணீர் தொட்டியை வனத்துறை கட்டியுள்ளது. அதில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நீர் அருந்திவிட்டு செல்கின்றன.