தமிழ்நாடு

டெங்கு பாதிப்பு: மத்திய இணையமைச்சர் இன்று தமிழகத்தில் ஆய்வு

டெங்கு பாதிப்பு: மத்திய இணையமைச்சர் இன்று தமிழகத்தில் ஆய்வு

Rasus

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே இன்று தமிழகம் வருகிறார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டெங்கு நோயாளிகளை இன்று காலை சந்தித்து அவர் நலம் விசாரிக்க உள்ளார். மேலும், தமிழக அரசு மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் கேட்டறிய இருக்கிறார்.

டெங்கு ஒழிப்புப் பணிக்கு கூடுதலாக 256 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் மத்தியக்குழுவைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சரும் தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.