தமிழ்நாடு

கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Sinekadhara

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 2 மணிநேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதே நிலையில் நகர்ந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும் சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு வண்ண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.