பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்து சுற்றுலா பயணி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் சாலை பாலத்தில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் நடுக்கடலில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ரயில் தூக்கு பாலம் கப்பல் கடந்து செல்லும் கால்வாயில் விழுந்து தத்தளித்தார். அப்போது கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தெற்குவாடி மீனவர்கள் அவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
லேசான மயக்க நிலையில் இருந்த அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மரைன் போலீசார் விசாரணை செய்ததில் அவர் பெங்களூரை சேர்ந்த தமோகர் என தெரியவந்தது. கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்ய கடலில் குதித்ததாக தெரிவித்துள்ளார்.
மரைன் போலீசார் இவருக்கு இதுபோன்ற தற்கொலை முயற்சிகளில் இனிமேல் ஈடுபடக்கூடாது என மனரீதியாக கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் பாம்பனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.