தமிழ்நாடு

கோவையில் அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் 2,781 பேருக்கு பாதிப்பு

கோவையில் அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் 2,781 பேருக்கு பாதிப்பு

Veeramani

கோவையில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு அடுத்த இடத்தை கோவை பிடித்துள்ளது.

கோயமுத்தூரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை மொத்தமாக 97,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 13 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவையில் 12 லட்சத்து 13 ஆயிரத்து 404 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 113 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரக்கூடிய சூழலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், விடுதிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 516 தயார் நிலை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.