தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது?

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது?

webteam

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அடுத்தவாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் உள்ளிட்டோரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அம்மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து வழக்கின் தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று பினாக்கி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு அறிவித்திருந்தது. ஆனால், இந்த வழக்கில் நாளையும் தீர்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இடம்பெறவில்லை. இதனால், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் திர்ப்பு 14 அல்லது 15ம் தேதி வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.