தமிழ்நாடு

இதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்

இதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்

webteam

1994 ஆம் ஆண்டில்  வங்காள விரிகுடாவில் உருவான புயல் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 115 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது . இந்தப் புயல் காரணமாக பலத்த மழை பெய்து கடலோர மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தன. புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை அப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

டிரிபிள் சைக்ளோன்கள் (2005)

Pyaar , baaz , fanooz  என்ற மூன்று கடுமையான புயல்கள் உருவாகி ஒரு சேர இணைந்து மெகா புயலாக கரையைக் கடந்தது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி வேதராண்யம் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 101 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்த இந்தப் புயலின் காரணமாக பலத்த மழை பெய்து விவசாய நிலங்களை பாழாக்கின. ஆயிரக் கணக்ககானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்ததனர்.

சூறாவளி நிஷா (2008)

2005 ஆம் ஆண்டு மெகா புயலுக்கு பிறகு தமிழகத்தை தாக்கியது நிஷா புயல் மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது நிஷா. இந்தப் புயலால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வங்ககடலில் உருவான பெரிய புயலாக நிஷா புயல் பார்க்கப்பட்டது.  உயிர் சேதம் பொருட்சேதம் எனப் பெரும் இழப்பை தந்தது நிஷா.

சூறாவளி JAL (2010) 

2010 ஆம் ஆண்டு தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான இந்தப் புயலுக்கு ‘ஜல்’ என பெயர் வைக்கப்பட்டது . அதிதீவிர புயல் என்ற நிலையிலிருந்து புயலாக மாறி மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது ஜல். ஆனால் பெருத்த சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள். 

‘தானே’ புயல் (2011)

2011 ஆம் ஆண்டு  கோரத் தாண்டவம் ஆடியது ‘தானே’புயல். இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி கடலூர் மாவட்டம்  இந்திய பெருங்கடலில் கிழக்கு திசையில் உருவான ‘தானே’ மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் கடலுர், புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. ‘தானே’ புயலால் 48 பேர் உயிரிழந்தார்கள். கடலூரில் விளைநிலங்களை கடுமையாக சேதமாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியது. 

‘நீலம்’ புயல் (2012)

‘தானே’ புயல் கோரத் தாண்டவம் முடிந்து அடுத்தப்படியாக உருவானது ‘நீலம்’ புயல். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்க கடலில் உருவானது நீலம். மாமல்லபுரம் அருகே மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. கடலில்  இருந்து 100 மீட்டர் தெலைவில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

‘வர்தா’ புயல் (2016)

2016 ஆண்டு டிசம்பர் மாதம் தென்கிழக்கு வங்க கடலில் உருவான புயலுக்கு ‘வர்தா’ என பெயரிடப்பட்டது. மணிக்கு120 கிலோ மீட்டர் வேகத்தில் பழவேற்காடு அருகே கரையைக் கடந்தது வர்தா. இந்தப் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை மாவட்டம்தான். எங்கு பார்த்தாலும் மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்தவே ஒரு வாரம் ஆனது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கோடிகளில் பொருட்சேதம் ஏற்பட்டது.