தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு

webteam

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர். 

தமிழகத்தையே அதிர்ச்சி சம்பவத்திற்கு உருவாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட 5 பேர் மீது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறை துறையிடம் இருந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளிகளின் குடும்பத்தார் மற்றும் குற்றவாளிகள் நண்பர்களிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று சிபிஐ சேர்ந்த அதிகாரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கல்லூரி மாணவர்களை ஆசை வார்த்தை கூறி வரவழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சின்னப்ப பாளையம் பகுதியில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது.

சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு சம்பந்தமாக தீவிரமாக விசாரணை செய்வதால் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனிடையே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.