தமிழ்நாடு

மரம் வெட்ட வேண்டும்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு தண்டனை

மரம் வெட்ட வேண்டும்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு தண்டனை

webteam

ராமநாதபுரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியை ஒருவருக்கு 2,400 சதுரடி பரப்பளவில் உள்ள சீமை கருவை மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

ஊழியர் விரோத போக்கில் ஆசிரியர்கள் முகேந்திரன், சண்முகநாதனின் மீது பழி சுமத்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் திருப்புல்லானி எஸ்.எஸ்.ஏ.எம்.பள்ளி தலைமை ஆசிரியை பிரேமாவுக்கு 2,400 சதுரடி பரப்பளவில் உள்ள சீமை கருவை மரங்களை அகற்றுமாறு நூதன தண்டனை வழங்கியுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

இதை நிறைவேற்ற தவறினால் அரசே அகற்றி அதற்கான செலவை ஆசிரியையின் சம்பளத்தில் பிடித்தம் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிமன்றம், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்தது.