தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் ஏறியதில் வெடித்துச் சிதறியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தெற்கு கோட்டையூர் மேற்கு காலனி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனி பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியின் பின்புறம் மக்கள் நடமாட்டம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் சக்கரம் ஏறியபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து பெரும் சத்தம் கேட்டடுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான காவல் துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வெடிகுண்டு வெடித்த இடத்தில் பார்வையிட்டபோது அதன் அருகிலேயே மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து மேலும் ஏதேனும் குண்டு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.