தமிழ்நாடு

இறந்தவரின் உடலில் இருந்து கொரோனா பரவுமா? - மருத்துவர்கள் சங்கம் விளக்கம்

இறந்தவரின் உடலில் இருந்து கொரோனா பரவுமா? - மருத்துவர்கள் சங்கம் விளக்கம்

webteam

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநரான 55 வயது மருத்துவர் நேற்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு‌, காவல் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் உடலில் இருந்து கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என  தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களுக்காக சேவையாற்றியவரின் உடலை அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானமற்றது எனவும் தெரிவித்துள்ளார்