heavy rain pt desk
தமிழ்நாடு

தொடர்மழை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு, தி.மலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக அரியலூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

webteam

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (14.11.2023) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி அறிவித்துள்ளார்.

school leave

கனமழை காரணமாக இன்று (14.11.23,) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வியமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று (14.11.2023) செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பழனி அறிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார்.

school leave

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம்வர்கீஸ் அறிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 14.11.2023 மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்