தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் காங்கிரஸின் கை மீண்டும் ஓங்குகிறது.. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவரம்!

ஈரோடு கிழக்கில் காங்கிரஸின் கை மீண்டும் ஓங்குகிறது.. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவரம்!

JananiGovindhan

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 2) எண்ணப்பட்டு வருகின்றன. 8 மணி முதல் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை பணியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சித்தோடு பகுதியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் 16 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த வாக்கு எண்ணிக்கை பணிக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை, துணை ராணுவம் என 450 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போக வாக்கு எண்ணும் மையத்திலேயே 600 காவலர்களும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்த முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதன்படி, தபால் ஓட்டுகளில் பதிவான 397 வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவும் எண்ணப்பட்டுள்ளன. அதில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 3869 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

அடுத்தபடியாக அதிமுகவின் தென்னரசு 1414 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 63 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் 17 வாக்குகளும் இதுவரை பெற்றிருக்கின்றன.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருப்பதால் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் தொண்டர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். மேலும் ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸின் கையே ஓங்குகியிருக்கிறது என்றும் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த நிலவரங்களை தெரிந்துகொள்ள புதிய தலைமுறையின் சமூக வலைதள பக்கங்களை தொடர்ந்து பின் தொடருங்கள்.

வலைதளம் : Puthiyathalaimurai

ட்விட்டர் : PuthiyathalaimuraiTV

ஃபேஸ்புக் : புதிய தலைமுறை

யூடியூப் : PuthiyathalaimuraiTV