தமிழ்நாடு

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்: வைரலாகும் வீடியோ

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்: வைரலாகும் வீடியோ

webteam

கோவையில் அரசுப் பேருந்து நடத்துனர் பயணி கொடுக்கும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக
பரவி வருகிறது. 

சமீப காலமாக 10 ரூபாய் நாணயங்கள் குறித்த சர்ச்சை அதிகளவில் பரவி வருகிறது. இந்த நாணயங்கள் குறித்து மக்களிடையே பரவி இருக்கும்
வதந்தியை போக்கும் வகையில், 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து செல்லும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில்
விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுவதில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி  
வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர் செல்லும் பேருந்தில் இன்று அதிகாலை ஏறிய பயணியிடம் நடத்துனர் பத்து
ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துள்ளார். இதனை அந்தப் பயணி தன் மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். 10
ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள போதிலும், அரசுப் பேருந்திலேயே நாணயத்தை வாங்க மறுப்பது மக்களிடையே
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வங்கி மேலாளர் ஒருவர், தொழிலாளர் ஒருவரிடம் இருந்து 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த
வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பரவியது குறிப்பிடத்தக்கது.