தமிழ்நாடு

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து - 5 பேருந்துகள் எரிந்து நாசம்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து - 5 பேருந்துகள் எரிந்து நாசம்

webteam

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஐந்து பேருந்துகளில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்தின் அடிப்படையில் பொது போக்குவரத்து வசதியானது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்துகள், பெரும்பான்மையான அரசுப் பேருந்துகள் 150 நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துகளில் சில திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 3 பேருந்துகள் முழுவதுமாக எரிந்து விட்டதாகவும், 2 பேருந்துகளில் எரிந்து கொண்டிருக்கும் தீயை தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது “ பேருந்துகள் இயங்காத காரணத்தினால் உரிய பராமரிப்பின்றி ஆம்னி பேருந்து நிலையம் இருந்தது. இதன் காரணமாக வெளியில் இருந்து உள்ளே வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே அவர்கள் மூலமாகத்தான் தீப்பற்றிருக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.