கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி நாளை மறுநாள் அங்கு செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவந்த சென்னையைவிட கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. கோவையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5000த்தை நெருங்கிவரும் நிலையில் சென்னை மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த சித்திக் ஐஏஎஸ் தற்போது கோவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மே 30ஆம் தேதி கோவைக்கு நேரில் சென்று பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிலைமையை ஆய்வு செய்து ஆலோசனை நடத்தவுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக கோவை செல்லவுள்ளார்.