மணிக்கு 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகம், தானியங்கி கதவுகள் உள்பட நவீன தொழில்நுட்ப அமைப்புகளால் வரவேற்பை பெற்றுள்ளது வந்தே பாரத் ரயில் திட்டம். தமிழகத்தைச் பொறுத்தவரை சென்னையில் இருந்து கோவை மற்றும் மைசூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சென்னை - நெல்லை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படுவதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்சேவை அறிவிப்பு வெளியானதுமே வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்சேவைக்கான கட்டணங்களை இரண்டு விதமாக அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். அதன்படி சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் ஏ.சி. சாதாரண வகுப்பு கட்டணமாக ஆயிரத்து 620 ரூபாய், சொகுசு வகுப்பு கட்டணம் 3ஆயிரத்து 025 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.