தமிழ்நாடு

ஏரிகள் நிரம்பி ஆபத்து நேருமோ என்ற அச்சம் வேண்டாம்: பேரிடர் நிர்வாக ஆணையர்

ஏரிகள் நிரம்பி ஆபத்து நேருமோ என்ற அச்சம் வேண்டாம்: பேரிடர் நிர்வாக ஆணையர்

webteam

சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளின் தண்ணீர் இருப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாநில பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியுள்ளார்.

புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மாநில பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பூண்டி ஏரியின் கொள்ளவு 35 அடியாக உள்ள நிலையில் தற்போது அதில் 21.5 அடி நீர் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 17.86 அடியாக உள்ள நிலையில் தற்போது 7.75 அடி மட்டுமே நீர் உள்ளது. 21.2 அடி கொள்ளளவு கொண்ட செங்குன்றம் ஏரியில் தற்போது 7 அடி மட்டுமே நீர் இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில் தற்போது 11 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1716 கன அடி நீ வந்துகொண்டிருக்கிறது. எனவே ஏரிகள் நிரம்பி ஆபத்து நேருமோ என மக்கள் கவலைகொள்ள தேவையில்லை என்று அவர் கூறினார்.