தமிழ்நாடு

அன்று பட்டா கத்தியுடன் பள்ளி மாணவர்கள் வீடியோ.. இன்று மன்னிப்பு கேட்டு போலீசிடம் வீடியோ!

அன்று பட்டா கத்தியுடன் பள்ளி மாணவர்கள் வீடியோ.. இன்று மன்னிப்பு கேட்டு போலீசிடம் வீடியோ!

Sinekadhara

ரயிலில் பள்ளி மாணவர்கள் பட்டா கத்தியுடன் வெளியிட்ட வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் அவர்களை வைத்தே விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிகளிலும், பேருந்துகள் மற்றும் ரயில்களிலும், பொதுமக்களிடமும், ஆசிரியர்களிடமும் அத்துமீறலில் ஈடுபடுவது சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு ரயில்வே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றில் 4 பள்ளி மாணவர்கள் பட்டா கத்தியுடன் "வடசென்னை"  பட BGM மியூசிக் பதிவோடு வீடியோ ஒன்றை பதிவு செய்து இன்ஸ்டாகிராம்மில் பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து சேத்துப்பட்டு போலீசார் இதனைப் பார்த்து அந்த 4 பள்ளி மாணவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி எச்சரிக்கை விடுத்தனர்.

பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கினர். இதையடுத்து 4 பள்ளி மாணவர்களும் தாங்கள் செய்தது தவறு என்றும், போலீசார் தங்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும், தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், மேலும் லைக்குக்கு ஆசைபட்டு இதுபோன்ற தவறை நீங்களும் செய்யவேண்டாம் என பேசிய வீடியோ ஒன்றை காவல்துறை வெளியிட்டுள்ளது.