தமிழ்நாடு

மெட்ரோ ரயிலின் 'இலவச சைக்கிள் திட்டம்'

மெட்ரோ ரயிலின் 'இலவச சைக்கிள் திட்டம்'

webteam

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இலவச சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுடனான உறவு ரயில் நிலையத்தோடு முடியாத வகையில் அவர்கள் செல்லவேண்டிய இடம்‌வரை கொண்டு சேர்க்கும் விதமாக மெட்ரோ ரயிலின் இலவச சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு மாதத்தில் 100 மணிநேரத்திற்கு இலவச சைக்கிள் பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதிக்கின்றது. பயணத்தின் போது சைக்கிள்களை குறிப்பிட்ட நே‌ரத்தில் திருப்பி ரயில்நிலையத்தில் சேர்க்காத பட்சத்தில், கணினி உதவியுடன் சைக்கிளை முடக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த இலவச சைக்கிள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடம் கிடைக்கப்பெறும் வரவேற்பை பொருத்து திட்டத்தை விரிவு படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.