சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழக தலைவர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை ஐஐடியில் ஐந்து மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அஸ்வத்தாமன் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு, சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அரசு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா சமீபத்தில் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாத்திமாவின் தற்கொலைக்கு 3 பேராசிரியர்களே காரணம் எனப் புகார் எழுந்தது. இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்