புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்கப்பட்ட பிறகும் ரூ.2.25 கோடி செலவழிக்கப்பட்டது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாகக் கூறி 2011ல் நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு 2015ல் சம்மன் அனுப்பப்பட்டது. ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவு மற்றும் சம்மனை ரத்து செய்யக் கோரி மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணைக்கும், சம்மனுக்கும் 2015 மார்ச் 12ல் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், ஆணையங்கள் அமைக்கப்படுவது தேவையற்றது என்று கூறியதுடன், செயல்பாட்டில் இருக்கும் ஆணையங்கள் மற்றும் அதற்கு செலவிடப்பட்ட பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 5 ஆணையங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணன் அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது, ரகுபதி ஆணையத்திற்கு தடை விதிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.2.25 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் பணம் செலவிடப்பட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும் கூறினார். இதையடுத்து விசாரணையை 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தாக்கல் செய்த அறிக்கையிலுள்ள 5 ஆணையங்கள்