தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் அரைசதம் அடித்த தக்காளி விலை! விலை உயர்வுக்கு இதான் காரணம்!

கோயம்பேடு சந்தையில் அரைசதம் அடித்த தக்காளி விலை! விலை உயர்வுக்கு இதான் காரணம்!

webteam

தமிழ் நாட்டில் தக்காளி விலை அரைசதம் அடித்துள்ளது. மேலும் கனமழையால் தக்காளி வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், சந்தையில் கடந்த வாரத்தில் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 45 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

அதேநேரம், சில்லறை விற்பனையில் அங்காடிகளில் ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயாக விலை உயர்ந்து காணப்படுகிறது.

மேலும் ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், தக்காளி கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.