தமிழ்நாடு

சதுர்த்தி விழா: அரசின் உத்தரவை மதிக்க வேண்டியதில்லை - இந்து முன்னணி

சதுர்த்தி விழா: அரசின் உத்தரவை மதிக்க வேண்டியதில்லை - இந்து முன்னணி

kaleelrahman

கடந்த ஆண்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மதிக்க வேண்டியதில்லை என்று இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன், மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்படும். இதற்காக எந்த காலத்திலும் காவல் துறையிடம் அனுமதி கோரியதில்லை என்று தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு என கூறி அனைத்து இந்து கோவில்களிலும் வரும் 2ஆம் தேதி வழிபாடு நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.