தமிழ்நாடு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

webteam

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாளை, வட கடலோர தமிழகம், சென்னை , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதிகளுக்கும், நாளை மறுநாள் மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது