தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தாமரைப் பாக்கம் 10 செமீ, பந்தலூர் 9 செமீ, தேவாலா பாலவிடுதி 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு மன்னார் வளைகுடா அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.