தமிழ்நாடு

பழவேற்காடு முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசு ஆய்வு

பழவேற்காடு முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசு ஆய்வு

Rasus

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க, வரும் 23-ஆம் தேதி மத்திய அரசு ஆய்வு நடத்துகிறது.

பழவேற்காடு ஏரி மணல் திட்டுகளை தூர்வாரி நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 23-ஆம் தேதி பழவேற்காடு முகத்துவாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை ஆய்வு நடத்துகிறது. முகத்துவாரம் மணல் திட்டுகளால் மூடிக்கிடப்பதால், மீனவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மணல் திட்டுகளை அகற்றிவிட்டு நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.