தமிழ்நாடு

கருப்பு பூஞ்சை மருந்து: தமிழகத்திற்கு 1,790; மகாராஷ்டிராவிற்கு 18,140 குப்பிகள் ஒதுக்கீடு

கருப்பு பூஞ்சை மருந்து: தமிழகத்திற்கு 1,790; மகாராஷ்டிராவிற்கு 18,140 குப்பிகள் ஒதுக்கீடு

JustinDurai

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து, தமிழகத்திற்கு ஆயிரத்து 790 குப்பிகளை ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆம்போடெரிசின்-பி மருந்தை நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கிடு செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த மருந்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 80 ஆயிரம் குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

அதில், தமிழகத்திற்கு ஆயிரத்து 790 குப்பிகளும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 18,140 குப்பிகளும், குஜராத்திற்கு 17,330 குப்பிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. மருந்தின் விலை ஆயிரத்து 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது.