அரசுக்கு எதிராக பேசிய புகாரில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் "தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்" என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது திருமுருகன் காந்தி அரசுக்கு எதிராக பேசியதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மற்றும் பெரியசாமி, டைசன், அருள் முருகன் ஆகியோர் மீது, கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.