பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்தை பதிவிட்டார். அந்தப் பதிவு:
இதுதொடர்பாக அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
காவல்துறை வழக்கு பதிவு செய்யாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காசி என்பவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு மீதான உத்தரவை வரும் 7 ம் தேதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளிவைத்துள்ளார்.