தமிழ்நாடு

600 கிலோ கன்றுகுட்டி கறி பறிமுதல்

600 கிலோ கன்றுகுட்டி கறி பறிமுதல்

webteam

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆட்டுக்கறி போல் விற்கப்பட்ட கன்றுகுட்டி கறி 600 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 

கூவம் ஆற்றின் கரையில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், எழும்பூர் போலீசாரும் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 600 கிலோ கறியை பறிமுதல் செய்த அதிகாரிகள், 7 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த கறி வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி என்பதும், ஆட்டுக்கறியைப் போல இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. 

இவற்றை சென்னையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் வாங்கிச் சென்று, சுவையூட்டிகள் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கறி பின்னர் அழிக்கப்பட்டது.