தமிழ்நாடு

ரேசன் கடையில் கட்டாயப்படுத்தி பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை!

ரேசன் கடையில் கட்டாயப்படுத்தி பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை!

webteam

ரேசன் கடை ஊழியர்கள், பொதுமக்களிடம் இதர பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சட்டபேரவையில் திமுக தரப்பில் கொண்டுவரப்பட்ட ரேசன் கடை பொருள்கள் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கையில் அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்தார். திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் இந்த தீர்மானத்தின் மீது பேசிய போது உளுந்து ரேசன் கடைகளில் கிடைப்பதில்லை எனவும், துவரம் பருப்பும், பாமாயிலும் குறைந்த அளவே கிடைப்பதாகவும் கூறினார். கோதுமை முழுமையாக கிடைப்பதில்லை எனவும் கூறினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும், ரேஷன் கடைகளில் பொருட்கள் குறைவாக வழங்கபடுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைபடுத்தபட்ட பிறகு விலையில்லா அரிசி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என்றும் அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார். அத்துடன் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் இதர பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.