தமிழ்நாடு

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது: 4 மாவட்டங்களில் இல்லை

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது: 4 மாவட்டங்களில் இல்லை

webteam

தமிழகத்தில் 4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மண்டலம் 1 - கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2 - தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி,
மண்டலம் 3 - விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி,
மண்டலம் 4 - நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,
மண்டலம் 5 - திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,
மண்டலம் 6 - தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தென்காசி,
மண்டலம் 7 - காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,
மண்டலம் 8 - சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்க தடை தொடர்கிறது. இவை தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் 60% இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இபாஸ் தேவை இல்லை. அதேசமயம் மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்திற்கு இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனிடையே புதுக்கோட்டையில் பொது போக்குவரத்து தொடங்குவதை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.