தமிழ்நாடு

7 வயதில் ஆடு மேய்க்கச் சென்று கொத்தடிமையான சிறுவன்: மீட்டுத்தர தாய் கோரிக்கை

7 வயதில் ஆடு மேய்க்கச் சென்று கொத்தடிமையான சிறுவன்: மீட்டுத்தர தாய் கோரிக்கை

sharpana

குடும்ப வறுமையால் ஆடு மேய்க்க சென்ற சிறுவன், கொத்தடிமையாக சிக்கி தவித்ததைப் பார்த்த சிறுனின் தாய் சிறுவனை மீட்டுதரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அம்மனூர் பெரியாச்சி கொல்லையிலிருந்த சிறுவன் மணிமாறனை கடந்த 2016ஆம் ஆண்டு ஆடு மேய்க்க காரைக்குடியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். தந்தை தேவராஜன் உயிரிழந்த நிலையில் சகோதரனுடன் நிர்கதியான தாய் லட்சுமியின் கண்ணீரை துடைக்க 12 வயது சிறுவன் மணிமாறன் 3-வது படித்துக் கொண்டிருந்த போது பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, குடும்பத்தின் வறுமையை போக்க ஆடு மேய்க்க சென்றுள்ளான்.

ஆனால், அழைத்துச் சென்ற நாகராஜோ பின்னர் வேறு ஒருவருக்கு சிறுவனை கொத்தடிமையாக விற்றதாக கூறப்படுகிறது. தற்போது 12 வயதே ஆகும் நிலையில், இந்த வயதிலேயே கடன், ஏமாற்றம், பட்டினி, கடின உழைப்பு என அனைத்தையும் சந்தித்துள்ளதை அறிந்த சிறுவனின் தாய் லட்சுமி சிறுவனை மீட்டுத்தர கோரிக்கை கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்.