கோவை விமான நிலையத்தினை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாநகர் முதல் தெரு என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், இடைநிலை ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கோவை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
4 நபர்களுடைய வாக்காளர் அடையாள எண்களை குறிப்பிட்டும், அந்த அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் தொடர்பாக விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர், பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.