தமிழ்நாடு

பாபர் மசூதி இடிப்பு தினம்: 3 அடுக்கு பாதுகாப்புடன் காவல்துறையினர் கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம்: 3 அடுக்கு பாதுகாப்புடன் காவல்துறையினர் கண்காணிப்பு

Veeramani

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, 3 அடுக்கு பாதுகாப்பு போட்டு காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அயோத்தியில் இருந்த பழமையான பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. வரலாற்றின் கருப்பு தினமான இந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப் படுத்தியுள்ளனர்

சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கிடமாக யாரேனும் தங்கியிருந்தார் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு விடுதிகளின் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசுக் கட்டடங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.