சட்டப்பேரவையில் ஏற்பட்ட ரகளை காரணமாக சபாநாயகர் தனபால் அவையிலிருந்து வெளியேறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்த வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். வாக்கெடுப்பினை நடத்தும் முறையை முடிவு செய்வது தம்முடைய உரிமை என்றும், எம்எல்ஏக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்க உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சபாநாயகர் தனபால் பேசினார்.
ஆனால், சபாநாயகர் கோரிக்கையை ஏற்க மறுத்த திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள், அவரது இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும், திமுகவினர் தொடர்ச்சியாக ரகளையில் ஈடுபட்டபோது சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டு, அவரது இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. அதேபோல, அங்கிருந்த கோப்புகளும் கிழித்தெறியப்பட்டன. இதனால் சபாநயாகர் அவையை விட்டு வெளியேறியதுடன், 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சபாநாயகரின் இருக்கையில் ஆயிரம் விளக்கு தொதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அமர்ந்து ரகளை செய்தார்.