தமிழ்நாடு

கலாம் அருங்காட்சியகம்.. கிடப்பில் இடம் ஒதுக்கீடு!

கலாம் அருங்காட்சியகம்.. கிடப்பில் இடம் ஒதுக்கீடு!

webteam

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் நினைவிடம் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில் அறிவுசார் மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க நிலம் கிடைக்காத நிலை நீடிக்கிறது. 
50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கட்டுமானப்பணிகள் மேம்பாட்டுத்துறை சார்பில் இரவு பகலாக வேலை நடந்து வருகின்றன. இந்த நினைவிடத்தில் கலாம் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை கொண்ட அருங்காட்சியம் ஒன்றும் அமைய உள்ளது. இதற்கான பொருட்கள் தயார்நிலையில் உள்ளசூழலில், அருங்காட்சியகத்திற்கான நிலம் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், இதனை தொடர்ந்து அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் போன்ற காரணங்களால் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கிடப்பில் இருக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த பகுதியில் தனியார் இடம் விலை அதிகம் என்பதால், நினைவிடத்திற்கு எதிரே உள்ள அரசு இடத்தை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அந்த இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.