தமிழ்நாடு

நாளை நீட் தேர்வு எழுதவிருந்த தர்மபுரி மாணவர் தற்கொலை - மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

நாளை நீட் தேர்வு எழுதவிருந்த தர்மபுரி மாணவர் தற்கொலை - மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

rajakannan

தர்மபுரி மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதி ஸ்ரீ துர்கா, தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணவியின் தற்கொலை குறித்து தங்களது இரங்கலையும், தற்கொலை தீர்வல்ல என்ற கருத்தினையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நாளை நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா (20) இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தந்தை மணிவண்ணன், தாய் சித்ரா. இலக்கியம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகிறார். நீட் தேர்வுக்காக தயார் செய்து கொண்டு வந்த நிலையில், திடீரென இந்த முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் நீட் தேர்வு எழுதவிருந்த இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

==

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)