தமிழ்நாடு

தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல்

தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல்

webteam

சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் 2 புள்ளி 5 டிஎம்.சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாநதி நீரை தமிழகத்திற்கு கூடுதலாக திறந்து விடுவது குறித்து, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, 2 பக்க உரையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார். பேச்சுவார்த்தைக்குப்பின்னர், கிருஷ்ணா நதியிலிருந்து, 2 புள்ளி 5 டி.எம்.சி தண்ணீரை கூடுதலாக திறந்து விட ஆந்திர அரசு ஒப்புதல் ‌அளித்ததாக அதிகாரிகள் மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,‌கிருஷ்ணா நதியில் 5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுப்ற்றி பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு எப்போது தண்ணீரைத் திறந்து விடுவது உள்ளிட்ட சில அம்சங்கள் குறித்து இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் திருப்பதியில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.