தமிழ்நாடு

'அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்' : ஆட்சியர் சந்தீப் நந்தூரி

'அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்' : ஆட்சியர் சந்தீப் நந்தூரி

webteam

தூத்துக்குடியில் மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பால், காய்கறிகள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆவின் மூலம் தற்காலிக பால் கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன பண்ணைப் பசுமைக் கடைகள், அம்மா உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்படுகிறது என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து இயக்கம் குறித்து காவல்துறையினரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் மற்றும் தூத்துக்குடி ‌மாவட்டம் முழுவதும் இ‌யல்பு நி‌லைத் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இந்நிலையில் 15 எஸ்.பி, 3 டி.ஐ.ஜி. தலைமையில் தூத்துக்குடியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.