இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 85 பேரும் விடுவிக்கப்படுவர் என்று இந்திய வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, மீனவர்கள் விடுதலை தொடர்பாக இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் இனிமேல் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்காது எனவும் இலங்கை உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எச் 1பி விசா தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கோபால் பாக்லே தெரிவித்தார்.