தமிழ்நாடு

மன்னார்குடியில் அமோகமாக மது விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை

மன்னார்குடியில் அமோகமாக மது விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை

Rasus

சுதந்திர தினத்தையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், குடிமகன்களுக்கென்றே பிரத்யேகமாக மன்னார்குடியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளன. 

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல்ராஜவீதி, கீழராஜவீதி, பந்தலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் முறைகேடாக மதுபானம் பெற ஏராளமானோர் காத்திருப்பதையும் பொதுமக்களால் காண முடிந்தது. இதனிடையே, பொது இடங்களில் முறைகேடாக மதுபான விற்போர் குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மன்னார்குடி காவல்துறையினர் எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.