தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்காகவே அதிமுக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது...
சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்காகவே உட்கட்சி தேர்தலை நடத்தி வருகின்றனர் சிலர் ஜனநாயக முறைப்படி பின்பற்றினாலும் சிலர் அதை பின்பற்றுவதில்லை அதன்படி தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்காக சடங்கு சம்பிரதாயத்திற்காகவே அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது,
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மற்ற மொழிகளின் ஆதிக்கம் தமிழகத்திற்குள் நுழைந்து விடும்.
நாகலாந்தில் 13 பொதுமக்களை தீவிரவாதிகள் என சுட்டுக் கொன்றதாக கூறுகின்றனர். நல்லவேளை ராணுவத்தினரை தீவிரவாதி என சுட்டுக் கொல்லவில்லை இது மோடி அரசின் நிலையை காட்டுகிறது. இதில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள் தொடர்ந்து பாலியல் வழக்குகளில் சிக்குவது துரதிஷ்டவசமானது. மாதா பிதா கடவுள் வரிசையில் குருவாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் அவர்களே பாலியல் சம்பவங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம், பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிதான்; பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
ஆனால், அந்த ஆசிரியர்களாலேயே பாலியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ற செய்தியே அநாகரிகமானது கண்டிக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான குற்ற சம்பவம் ஆகும், இதை காவல் துறையினரும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்களும் தடுக்க முன்வரவேண்டும்,
ஒன்றிய அரசு சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பெற்ற தோல்வி எதிரொலியாக பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. தமிழக அரசும் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் வரி குறைத்துள்ளது. மேலும் டீசலுக்கு, வரக்கூடிய பட்ஜெட்டிலோ அதற்கு முன்பாகவோ வரி குறைப்பதற்கான வாய்ப்புள்ளது; என்று தெரிவித்தார்.