கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகள் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகி வருகிறது.
தற்போது கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகள் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலா ரூ.10 கோடி செலவில் 3 வேளாண் கல்லூரிகள் அமைக்க பேரவையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.