vijayalakshmi seeman pt desk
தமிழ்நாடு

"சீமான் சார் கிட்ட பேசினேன்; வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன்; பணம் வாங்கவில்லை”-நடிகை விஜயலட்சுமி பேட்டி

”இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்” என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

webteam

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்து சீமான் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் இருமுறை சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

veeralakshmi

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, ”சென்னையில் இருந்து தூரத்தில் தான் என்னை போலீசார் வைத்திருந்தனர். வீரலட்சுமிக்கு தெரிந்த இடம் என்பதால் அங்கு வைத்திருந்தனர். கடந்த சில தினங்களாக வீரலட்சுமி ஒரு வழியில் செல்கிறார். என்னை ஒரு வழியில் எடுத்து சென்றார். நேற்றிரவு முதல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியே போக வைத்துவிட்டார். உணவையும் நிறுத்திவிட்டார். சொல்ல முடியாத அளவு கொடுமைகள் நடந்தது.

இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன். வழக்கை தொடர்வது, சென்னைக்கு வருவது இனி இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார். இரண்டு வாரமாக வீட்டு காவலில் இருந்தது போல் இருந்தேன் செல்போன் கூட இல்லை.

seeman

சீமானுக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வியை ஒத்துக் கொண்டு செல்கிறேன். திமுக விளையாட்டு எனக்குத் தெரியாது. சீமான் ஃபுல் பவராக உள்ளார். சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது நான் சீமானிடம் காசு வாங்கவில்லை. சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வருவது முடியவில்லை. அதனால் அவர் பவராக உள்ளார்” என தெரிவித்தார்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை நள்ளிரவில் திரும்பப் பெற விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையம் வந்த அவர், புகார் மனுவை வாபஸ் பெறுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தார்.